News December 18, 2025

காட்பாடி டெய்லர் போக்சோ வழக்கில் கைது

image

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்‌. இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.

Similar News

News December 19, 2025

சைபர் கிரைம் குற்றம் குறித்து விழிப்புணர்வு பேனர்

image

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கிரீன் சர்க்கிள், சில்க்மில், பழைய பஸ் நிலையம், டோல் கேட், ஸ்ரீபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் அவசர எண் (1930), இணையதள முகவரி ஆகியவை உள்ளன.

News December 19, 2025

வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 19, 2025

வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

வேலூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!