News October 24, 2024

காட்பாடியில் நாளை குட்டி முருகன் சொற்பொழிவு

image

காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 31 ஆம் ஆண்டு குருபூஜை நாளை(அக்.25) நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டில் முருகர் பாடல்களை பாடி அசத்திய குட்டி முருகன் என்று அழைக்கப்படும் தியாவின் இசை சொற்பொழிவு நாளை காலை 9 மணிக்கு காங்கேயநல்லூர் வாரியார் ஞானத்திரு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 28, 2026

வேலூர் மாவட்டத்தில் இன்று மின் தடை அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஜனவரி 28) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனால் வேலூர், குடியாத்தம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும். பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

News January 28, 2026

வேலூர் அருகே கோர விபத்து!

image

அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (31), கட்டிட மேஸ்திரி. இவர் தனது வீட்டின் மாடியில் வைத்துள்ள இரும்பு பொருட்களை எடுத்து கொண்டு கீழே வந்தார். அங்கிருந்த மின் கம்பி மீது இரும்பு கம்பி உரசியது. அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

வேலூரில் துடிதுடித்து பலி!

image

வேலூர் சத்துவச்சாரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியன்கள் சுரேஷ் (45) மற்றும் தாமஸ்பெர்லின் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். படுகாயமடைந்த தாமஸ்பெர்லின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற லாரி ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!