News January 20, 2025
காட்டுமன்னார்கோவில்: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

காட்டுமன்னார்கோயில் அருகே காங்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. தொழிலாளியான இவர், 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார் நேற்று (ஜன.19) மன்சூர் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 5, 2026
கடலூர் மாவட்டத்தில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி திட்டக்குடி 8 பேர், விருத்தாசலம் 10 பேர், பண்ருட்டி 6 பேர், கடலூர் 7 பேர், குறிஞ்சிப்பாடி 2 பேர், புவனகிரி 5 பேர், சிதம்பரம் 11 பேர், காட்டுமன்னார்கோவில் 3 பேர். நெய்வேலி ஒருவர் என மொத்தம் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 5, 2026
கடலூர்: 5 இடங்களில் சீமான் பிரச்சாரம்!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (ஏப்.5) காலை 10.30 மணிக்கு திட்டக்குடி, காலை 11.30 மணிக்கு வடலூர், மாலை 4.30 மணிக்கு நெய்வேலியில் வாகன பரப்புரையும், மாலை 5.30 மணிக்கு சிதம்பரம், மாலை 6.30 மணிக்கு கடலூரில் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
News April 5, 2026
கடலூர்: விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி!

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் போட்டியிடவில்லை என அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக மறைந்த மூத்த காங்., தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணிக்கு அந்த சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஜோதிமணி பேசுகையில், காங்., நிர்வாகியான எனக்கு, விசிகவில் சீட் வழங்கப்பட்டது எப்படியென என தெரியாது என்றார்.


