News March 24, 2025
காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 26, 2026
BREAKING: விருதுநகர்: EX அமைச்சர் வழக்கில் உத்தரவு

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தனது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்கவும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இனி மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.
News February 26, 2026
விருதுநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

விருதுநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரன் சூலக்கரைக்கும், வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும், செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சாத்தூருக்கும், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஸ்ரீவி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
News February 26, 2026
சிவகாசி: வாளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த இருவர் கைது

சிவகாசி மணிநகரை சேர்ந்த மந்திர குமார் என்கிற குள்ளமணி(24) கையில் வாளுடன் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து இவரை கைது செய்த டவுன் காவல்நிலைய போலீசார் வாளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கையில் வாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தத்தை (24) போலீசார் கைது செய்தனர்.


