News April 10, 2026

காஞ்சி: CERTIFICATE தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

காஞ்சி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 11, 2026

காஞ்சிபுரத்தில் இபிஎஸ் பிரச்சாரம்!

image

காஞ்சிபுரத்தில் நேற்று(ஏப்.10) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி , ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழகத்தை போதைப் பொருள் புழக்கத்திலிருந்து மீட்போம் என உறுதியளித்தார். தேரடி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில், காஞ்சிபுரம் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் கே.பழனி, உத்தரமேரூர் பெ.மகேஷ்குமார் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்குகள் சேகரிக்கப்பட்டன.

News April 11, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள்!

image

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் முறை வாக்காளர்களுக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் 100% வாக்களிக்க கலெக்டர் வேண்டுகோள் வைத்தார்.

News April 11, 2026

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!