News September 19, 2025

காஞ்சி: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர்!

Similar News

News March 3, 2026

காஞ்சிபுரத்தில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம்.இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

வாலாஜாபாத் கணேசன் தீவிர பிரச்சாரம்!

image

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்குப் பகுதி 11ஆவது வட்டம் சார்பில் நேற்று(மார்ச் 2) நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பி. கணேசன் கலந்து கொண்டார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார். இதில், திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News March 3, 2026

காஞ்சிபுரம் கால்வாயில் ஆண் சடலம்!

image

மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!