News September 23, 2025

காஞ்சி: வேலை தேடுபவர்களுக்கு குட்நியூஸ்!

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் செப்.26-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். (SHARE)

Similar News

News September 23, 2025

காஞ்சி: ரயில்வேயில் வேலை! – NO EXAM

image

காஞ்சி மக்களே, தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

காஞ்சிபுரம்: EB கட்டணத்தை குறைக்க இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர் பண்ணுங்க!

News September 23, 2025

காஞ்சி சங்கரமடம் அருகே லாரி மோதி விபத்து!

image

காஞ்சிபுரம் மாநகரம் சாலை தெரு சங்கரமடம் அருகே உள்ள சாலை திருப்பத்தில் இன்று (செப்.,23) காலை 7.15 மணியளவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி வேகமாக திரும்பியதில் சைக்கிளில் சங்கரமடத்திற்கு பூக்கள் கொண்டு சென்ற பூக்கடை வியாபாரி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!