News January 7, 2026
காஞ்சி: வீட்டின் பின்புறம் நேர்ந்த விபரீதம்

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தந்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகம்மா (75). இவர் கடந்த 1-ந்தேதி வீட்டின் பின்புறம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
காஞ்சியில் மயங்கி விழுந்து பரிதாப பலி!

திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ரமேஷ், நேற்று குருவிமலை முருகன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
காஞ்சி: சினிமா பாணியில் கடத்தல்!

மாடம்பாக்கத்தில் நடைப்பயிற்சி சென்ற மாணவர் துரையை (18), மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றது. அவரைத் தாக்கி மிரட்டிய கும்பல், (G-Pay) மூலம் ரூ.8 ஆயிரம் பறித்துக்கொண்டு ஒரத்தூரில் இறக்கிவிட்டது. மணிமங்கலம் போலீசார் சிசிடிவி மூலம் துப்புதுலக்கி, முகமது ரியாசுதீன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரமான தலைப்பு
News January 22, 2026
வாலாஜாபாத்தில் கோர விபத்து!

வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த குப்புசாமி (75), தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த குப்புசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


