News December 12, 2025
காஞ்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 14, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை டிசம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News December 14, 2025
காஞ்சிபுரம்: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் இங்கு <
News December 14, 2025
காஞ்சி மக்களே.. இதை தெரிஞ்சிக்கோங்க!

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க


