News October 22, 2024
காஞ்சி மக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து, நேரடியாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரக் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்க 96777 36557 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News November 20, 2024
இந்தியில் மாறிய LIC இணையதளம்: திருமா கண்டனம்
காஞ்சிபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, LIC இணையதளத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜக வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது என்றும், இது கண்டிக்கத்தக்கது என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
News November 20, 2024
45 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பலி
சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 20, 2024
கலை பண்பாட்டுத் துறை விருதுக்கு விண்ணப்பம்
காஞ்சிபுரத்தில், கலை பண்பாட்டுத் துறை விருது வழங்கப்பட உள்ளது. ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள், தங்களது கலைப் படைப்புகளை தன் விபரக்குறிப்புடனும், படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடனும், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம், (காது கேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகில்), ஓரிக்கை அஞ்சல் என்ற முகவரிக்கு வரும் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.