News March 22, 2024

காஞ்சி பாமக வேட்பாளர்?

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காஞ்சி தவிர 9 தொகுதிகளுக்கு மட்டும் பாமக இன்று(மார்ச் 22) வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Similar News

News October 17, 2025

காஞ்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

காஞ்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

காஞ்சி: டூவீலர் மீது மோதிய லாரி-மாணவர்கள் பலி!

image

காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் (20), தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (19) இருவரும், பொத்தேரியில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தனர். நேற்று இருவரும் கல்லுாரி முடிந்து, வண்டலுார்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கல்லுாரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரகடம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

காஞ்சிபுரத்தில் அக்டோபர்-16 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!