News November 7, 2025
காஞ்சி: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

காஞ்சி மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 12, 2026
காஞ்சிபுரத்தில் பெண் துடிதுடித்து பலி!

காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதா(34). இவர், நேற்று(பிப்.11) காவனூரில் மொபட்டில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பொத்தேரி ரயில் நிலையம் அருகே சாலையைக் கடக்க ஓரமாக நின்றார். இந்நிலையில், அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சரக்கு அட்டோ மீது மோதியது, அந்த சரக்கு ஆட்டோ, அருகே இருந்த மொபட்டில் மோதியது. இதில் படுகாயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News February 12, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படிக்கும், உதவித்தொகை பெறும் அல்லது விண்ணப்பித்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
காஞ்சிபுரத்தில் உடல் நசுங்கி கோர பலி!

வாலாஜாபாத் தாலுகா. தென்னேரி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(65). விவசாயியான இவர், தனது பைக்கில் வாலாஜாபாத் சென்று விட்டு மஞ்சமேடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரகடம் சாலையில் உள்ள சேர்க்காடு பகுதியில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில், லாரியி சக்கரத்தில் சிக்கிய மோகன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


