News January 22, 2026
காஞ்சி: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <
Similar News
News January 23, 2026
ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் (31), திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
காஞ்சியில் அதிகாலையே பயங்கரம்!

காஞ்சி மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் தொழிற்சாலை முழுவதும் புகைமண்டலமானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். மின் கசிவு காரணமா என்பது குறித்து படப்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


