News August 16, 2024
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரேமலதா தரிசனம்

பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். இதில், கோவில் நிர்வாகம் சார்பில் பிரேமலதாவுக்கு பிரசாதம் மற்றும் சுவாமி புகைப்படம் அளித்தனர்.
Similar News
News September 18, 2025
காஞ்சிபுரம்: தலை நசுங்கி ஒருவர் பலி!

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (52) ஆச்சாரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (செப்.,18) தனது மகளுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரிக்கை, மிலிட்டரி ரோடு சத்யா நகர் பகுதியில், பணியாளர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில், ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
காஞ்சிபுரத்தில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.