News August 19, 2025
காஞ்சி: கணவனை கொல்ல கூலிப்படை ஏவிய மனைவி

மேவலூர்குப்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பவானிக்கு கடையில் வேலை செய்யும் மதன் என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஹரி இருவரையும் பிரித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத இருவரும் கூலிப்படைக்கு பணம் தந்து ஹரியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ஹரி காவல்துறையில் புகார் அளித்த பெயரில் பவானி மற்றும் மதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
காஞ்சிபுரம்: இன்றைய காய்கறி விலை நிலவரம்

காஞ்சிபுரம் உழவர் சந்தையின் இன்றைய (ஆக.18) காய்கறி விலை நிலவரம். (1 கிலோ) தக்காளி ரூ.50-60, உருளைக்கிழங்கு ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.55-65, பெரிய வெங்காயம் ரூ.20-25, பச்சை மிளகாய் ரூ.35-40, கத்தரிக்காய் ரூ.35-40, வெண்டைக்காய் ரூ.35-40, முருங்கைக்காய் ரூ.55-60, பீர்க்கங்காய் ரூ.35-45, சுரைக்காய் ரூ.15-25, புடலங்காய் ரூ.25-35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.
News August 18, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். <