News November 16, 2025

காஞ்சி: கடன் பிரச்னை; கொள்ளையனாக மாறிய வாலிபர்!

image

குன்றத்தூர், இரண்டாம் கட்டளை கஜலட்சுமி நகரை சேர்ந்தவ கௌசல்யா (70) இரண்டு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றார். அப்போது இவரிடம் வழி கேட்பது போல நடித்து, 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் படப்பையை சேர்ந்த பிரதீப்பை (31) கைது செய்தனர். அவருக்கு கடன் பிரச்னை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Similar News

News November 16, 2025

காஞ்சிபுரம்: ரூ.18,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் Sharda Motor Industries Ltd நிறுவனத்தில் Assembly, Quality பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.17,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்த முன் அனுபவமும் தேவையில்லை. 18-34 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவ.16ம் தேதிக்குள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

காஞ்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவம்பர் 17) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 16, 2025

காஞ்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!