News December 26, 2025
காஞ்சி: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 6, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

மாங்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16ஆவது மாடியில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மேல் தளத்தில் வசித்து வரும் கோபிநாத், சைதன்யா, நிர்மல், பிரியங்கா ஆகியோர் இரவு நேரங்களில் சத்தம் போடுவதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 6, 2026
காஞ்சிபுரத்தில் நாளை பவர் கட்!

பழையசீவரம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.7) காலை 9 மணி முதல் பிற்பகம் 3 மணி வரை மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலூர், மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ் ஒட்டிவாக்கம், ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, அருங்கம்பாக்கம், அவளூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

சுங்குவார்சத்திரம் அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர், தனது மனைவி நிவேதாவுடன்(27) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொளச்சூர் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய ஜெகதீஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


