News September 1, 2025

காஞ்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

நேற்று ஆகஸ்ட் 31 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; தமிழக சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகளின் சமூகம் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து நவம்பர் 20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 1, 2025

காஞ்சிபுரம்: அரசு துறையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும், மேலும் இந்த பணிக்கு 15,000 தொடங்கி 50,000 சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர்

News September 1, 2025

காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா..?

image

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.

News September 1, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.1) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு நேரடியாக மக்களின் குறைகளை மனுவாக பெற உள்ளார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!