News September 27, 2025
காஞ்சி: அண்ணா ஓட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். உடன் விளையாட்டுத்துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News January 6, 2026
காஞ்சிபுரத்தில் 812 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் 2024-ல் 416 பேரும், 2025-ல் 396 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1,545 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளைக் குறைக்கக் காவல்துறை சார்பில் சுமார் 578 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் சாலைப் பிரச்சனைகளால் விபத்துக்கள் நடந்த வர்ணம் இருக்கிறது.
News January 6, 2026
காஞ்சி: லஞ்சம் கேட்ட VAO-வுக்கு விழுந்த ‘செக்’!

திருவள்ளூர் மாவட்டம் குமாரச்சேரியில், இலவச வீட்டுமனை பட்டாவை வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். காவலாளி சிவக்குமாருக்கு DCM உதயநிதி ஸ்டாலின் வழங்கிய பட்டாவைப் பதிவேற்ற ஆனந்தவேலு லஞ்சம் கேட்டுள்ளார். சிவக்குமாரின் புகாரின் பேரில், நேற்று பணத்தை அவர் வாங்கும்போது கைது செய்தனர்.
News January 6, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.05) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


