News May 14, 2024
காஞ்சியில் 66,040 மாணவர்கள் பயன்

தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் ரூ.28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 66,040 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.
Similar News
News February 1, 2026
காஞ்சிபுரம்: தாமிர ஒயர் திருட்டு சம்பவத்தில் 3 பேர் கைது!

உத்திரமேரூர் ஒன்றியம் சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் வயலில் உள்ள கிணறு பம்பு செட்டில் உள்ள தாமிர ஒயர்கள் திருடப்பட்டிருந்தது. சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் சாத்தனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (20), 18 வயது சிறுவன், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ரோகித் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
News February 1, 2026
காஞ்சிபுரம்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
காஞ்சிபுரம் அருகே அதிரடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது உப்பரி குளம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய கஜா, லோகநாதன், சுரேஷ் ஆகிய மூவரைப் பிடித்து விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரித்தனர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.


