News December 9, 2024

காஞ்சியில் 6ஆம் கட்ட சுற்று கோமாரி நோய் தடுப்பூசி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 169200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 16.12.2024 முதல் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Similar News

News March 3, 2026

காஞ்சிபுரம்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 3, 2026

காஞ்சிபுரத்தில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம்.இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

வாலாஜாபாத் கணேசன் தீவிர பிரச்சாரம்!

image

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்குப் பகுதி 11ஆவது வட்டம் சார்பில் நேற்று(மார்ச் 2) நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பி. கணேசன் கலந்து கொண்டார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார். இதில், திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!