News December 28, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்வரவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை டிசம்பர் 29 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Similar News
News December 28, 2025
காஞ்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
காஞ்சி: சிக்கன் சாப்பிட்ட பெண் மயங்கி விழுந்து சாவு!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (40). இவர் கடந்த 25-ஆம் தேதி இரவு சிக்கன் சாப்பிட்ட நிலையில், மறுநாள் காலையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாகத் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச. 28) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்தொலைபேசிட வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


