News December 21, 2025
காஞ்சியில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (டிசம்பர் 22) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களின் குறைகளை கோரிக்கைகளாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 26, 2025
காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..?

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை(டிச.27) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 10th, 12th, டிப்ளமோ, ஐடிஐ, முடித்த 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9080011602 எண்ணை அழைக்கவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 26, 2025
காஞ்சிபுரம்: புரோக்கர் கத்தியால் குத்திக் கொலை!

வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஷ்(41). ரியல் எஸ்டேட் தரகரான இவர், சுரேஷ்(40) என்பவரிடம் ரூ.34,000 கடன் வாங்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், அடகு வைத்த நகையை விற்று பணம் தருவதாக சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை காத்திருக்க வைத்தார் லிங்கேஷ். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷின் நண்பர் சரத்குமார், லிங்கேஷை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
News December 26, 2025
காஞ்சிபுரத்தில் இடியாப்பம் விற்பவர்களுக்கு உரிமம் கட்டாயம்.

காஞ்சிபுரத்தில் சைக்கிள், பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி தமிழக உணவு பாதுகாப்புத்துறை உரிமம்/பதிவு (FSSAI) பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு சுகாதாரத்தை உறுதி செய்து, மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துறை தெரிவித்துள்ளது. உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


