News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 3, 2026
வாலாஜாபாத் கணேசன் தீவிர பிரச்சாரம்!

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்குப் பகுதி 11ஆவது வட்டம் சார்பில் நேற்று(மார்ச் 2) நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பி. கணேசன் கலந்து கொண்டார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார். இதில், திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
News March 3, 2026
காஞ்சிபுரம் கால்வாயில் ஆண் சடலம்!

மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 3, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


