News August 30, 2025
காஞ்சியில் சோழர் கால மருத்துவமனை

நவீன மருத்துவ மனைகளுக்கு முன்னோடியாக சோழர் காலத்தில் காஞ்சிபுரம் திருமுக்கூடலில் மருத்துவமனை செயல்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள், மருத்துவர், மூலிகை மருந்துகளைத் தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள். பொதுப்பணியாளர் ஆகியோர் இருந்தாக கோயில் கல்வெட்டு கூறுகிறது
Similar News
News August 30, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (29.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
ஸ்ரீபெரும்புதூர் சார்-ஆட்சியருக்கு பதவி உயர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார்-ஆட்சியர் மிருணாளினி ஐஏஎஸ் பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண்ராஜ், சர்க்கரைத்துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டதாக அரசு தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
News August 29, 2025
காஞ்சிபுரம்: மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)