News January 9, 2026
காஞ்சியில் காவலர் அணுஅணுவாய் பலி

வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வம் (51) கடந்த 3-08-25 அன்று கோவில் பாதுகாப்பு பணிக்காக திம்மராஜம்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.8) உயிரிழந்தார்.
Similar News
News January 21, 2026
காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன-23-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எம். கிசான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகையைப் பெற, விடுபட்ட 2,654 விவசாயிகள் உடனடியாக e-KYC மற்றும் ஆதார் இணைப்பை மேற்கொள்ள ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், டிஜிட்டல் விவசாய அடையாள எண் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
காஞ்சி: மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 21, 2026
காஞ்சியில் பதைபதைக்கும் சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரி வாசன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது சாலையில் இருந்த தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சபரி வாசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


