News September 19, 2025
காஞ்சியில் ஓவியத்தால் தீட்டப்பட்ட அற்புதக் கோயில்!

காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள தீகம்பர சமண ஆலயம் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவால் கிபி 556ல் கட்டப்பட்டது. இங்குள்ள மண்டபத்தில் விஜயநகர கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சமண தீர்த்தங்கரர்களாகிய ரிஷபநாதர், வர்த்தமான மகாவீரர், நேமிநாதர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையிலுள்ளது. இந்த கோயிலில் உள்ள ஓவியங்களை காண்பதற்காகவே மக்கள் வந்து செல்கின்றனர் என்பது சிறப்பு!
Similar News
News March 9, 2026
பாராட்டு சான்றிதழ் வழங்கிய காஞ்சி ஆட்சியர்

இன்று (மார்ச்.09) காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .பா. முருகேசன் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்கள் (MPKBY) மற்றும் நிலை முகவர்களுக்கு (SAS) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்து கொண்டனர்.
News March 9, 2026
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<
News March 9, 2026
அரசு பணியாளர்களுக்கு பதவி உதவி வழங்க கோரி மனு

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மைளத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு வழங்கினார். அந்த மனுவில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது.


