News July 6, 2025

காஞ்சியில் அமைப்பாளர் நியமனம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக சார்பில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக வழக்கறிஞர் இ எல் கே கண்ணன் திமுக சார்பில் திமுக மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சுந்தர் நியமித்தார். மேலும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கண்ணனுக்கு கட்சியின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News

News July 6, 2025

பெண்ணை கொலை செய்து நகைகள் கொள்ளை

image

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டியார்பட்டில் உள்ள அட்டை நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை கொலை செய்து அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. ஹெப்சிபா என்ற பெண்ணை இரும்பு ராடல் அடித்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அட்டை நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில்நாதன் என்பவரை பொன்னேரிக்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News July 6, 2025

இலவச கண் பரிசோதனை முகாம்

image

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வரும் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 98423 46046, 94432 69946, 97914 08768 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். அனுமதி இலவசம். ஷேர் செய்யுங்கள்

News July 5, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!