News December 16, 2025
காஞ்சிபுரம்: 17வயது சிறுமிக்கு திருமணம்!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பென்னலூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு உறவினர் மகனான சரத் (26) என்பவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று(டிச.15) கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் உறவினரும் ஊர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Similar News
News December 20, 2025
காஞ்சி: ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை சிப்காட் பகுதியில் வாஷிங் மெசினுக்கு தேவைப்படும் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கு சிலர், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை திருடி செல்வதாக நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்ததில் அதே தொழிற் சாலையைச் சேர்ந்த பாலாஜி (29) , சபேசன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
News December 20, 2025
காஞ்சிபுரத்தில் இன்று மின் தடை!

ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இன்று(டிச.20) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டலம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, எண்ணைக்காரத்தெரு, காந்தி ரோடு, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, கலெக்டர் ஆஃபிஸ், சங்குசா பேட்டை போன பகுதிகளில் காலை 9 – மாலை 4 வரை மின் ரத்து. <<18618921>>தொடர்ச்சி<<>>
News December 20, 2025
காஞ்சிபுரம்: மின் தடைப் பகுதிகள்!

நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடுர், மேல்மதுரமங்கலம், சிங்கில்பாடி, கண்ணந்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், சிங்கவாடிவாக்கம், சின்னிவாக்கம் மருதம், பரந்தூர் மறும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


