News September 14, 2025
காஞ்சிபுரம்: வேன் மோதி பெண் பலி

வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் படப்பை அருகே செரப்பணஞ்சேரியில் சாலையை கடந்த அடையாளம் தெரியாத 45வயது மதிக்கத்தக்க பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் அந்தபெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 14, 2025
காஞ்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் செப்டம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News September 14, 2025
காஞ்சிபுரம்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

காஞ்சிபுரம் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <
News September 14, 2025
காஞ்சி: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிகழும் அதிசயம்

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தினமும் காலை 7 மணி- இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும். ஷேர் பண்ணுங்க.