News November 2, 2025
காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு GOOD NEWS!!

காஞ்சி தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு சாகுபடியுடன் தோப்பாகவோ அல்லது வரப்புகளை சுற்றி (பார்டர் கிராப்) வைக்க விலைமதிப்புள்ள தேக்கு மரம், மகாகனி, வேங்கை, செம்மரம் போன்ற மரங்கள் வளர்ப்பதற்கு மானியத்தில் மரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலை அதிகாரிகளை 95855 80403 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 3, 2025
காஞ்சிபுரம்: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின், மக்கள் நல்வரவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ.03) காலை 9 மணி முதல் தொடங்க உள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News November 3, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவம்பர். 02) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 01.11.2025 காலை 6 மணி முதல் 02.11.2025 காலை 6 மணி வரை எந்தத் தாலூகிலும் மழை பதிவாகவில்லை என TNSDMA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் மழை அளவுக் கண்காணிப்பு நிலையங்களில் 0 மிமீ என பதிவாகியுள்ளது. மனிதன், மாடு, வீடு உள்ளிட்ட சேதங்கள் எதுவும் இல்லை என அறிக்கை கூறுகிறது.


