News September 11, 2025

காஞ்சிபுரம்: விசாரணைக்கு நேரில் ஆஜரான பிரபல நடிகை!

image

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடிகை கௌதமிக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை மோசடி செய்ததாக கூறி, நடிகை கௌதமி கடந்த ஆண்டு அழகப்பன், ரகுநாதன், சுகுமாரன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில் சுகுமாரன் இறந்துவிட அவரை குற்ற பத்திரிகையில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பான விசாரணைக்கு நேற்று (செப்.,10) மாலை 4 மணிக்கு கௌதமி நேரில் ஆஜரானார்.

Similar News

News September 11, 2025

பரந்தூர் விமான நிலையப் பணிகள் தீவிரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கான நில கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களில் 441 நில உரிமையாளர்கள், 566 ஏக்கர் நிலங்களை ஒப்படைத்து, 284 கோடி இழப்பீடு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.29,150 கோடி மதிப்பில் அமையும் இந்த திட்டம், 20 கிராமங்களில் நடைபெறுகிறது. விமான நிலையம் அமைய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2025

காஞ்சிபுரம்: மீண்டும் பணியில் இணைந்த டிஎஸ்பி!

image

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே பிச்சுவாக்கம் கிராமத்தில் அடிதடி வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் நடவடிக்கை எடுக்கவில்லை என டிஎஸ்பி சங்கர் கணேஷ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, விசாரணைக்கும் தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீண்டும் நேற்று பணியில் இணைந்தார்.

News September 11, 2025

காஞ்சியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!