News September 4, 2025
காஞ்சிபுரம்: லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04427237139) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News September 4, 2025
காஞ்சி: Ration Card வைத்திருப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே (1800-425-5901) அழைத்து புகார் அளிக்கலாம். இந்த<
News September 4, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

மார்ச் 2013 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலத்தில் தேர்வு எழுதிய 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை செய்து உள்ளோம். இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் 02.12.2025-க்குள் காஞ்சிபுரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகலாம்.
News September 4, 2025
காஞ்சி: ஆம்புலன்ஸஸ் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பியுங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 7ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது 24 முதல் 35 உள்ளவராகவும், மாதம் ஊதியம் 21,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தகவலை அனைவருக்கும் பகிர்ந்து வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.