News May 4, 2024
காஞ்சிபுரம்: ராஜாஜி மார்க்கெட் நாளை செயல்படாது!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே 5 தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினம் கடைகள் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிக அமைப்புகள் அறிவித்துள்ளன. அதன்படி ஓரிகையில் அமைந்துள்ள தற்காலிக ராஜாஜி மார்க்கெட் நாளை(மே 5) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல் இயங்கும்.
Similar News
News December 8, 2025
காஞ்சி: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி, வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காட்ராம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் வளையகரணை ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 8, 2025
காஞ்சிபுரம்: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
காஞ்சிபுரம்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க


