News September 11, 2025

காஞ்சிபுரம்: மீண்டும் பணியில் இணைந்த டிஎஸ்பி!

image

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே பிச்சுவாக்கம் கிராமத்தில் அடிதடி வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் நடவடிக்கை எடுக்கவில்லை என டிஎஸ்பி சங்கர் கணேஷ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, விசாரணைக்கும் தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீண்டும் நேற்று பணியில் இணைந்தார்.

Similar News

News September 11, 2025

காஞ்சிபுரத்தில் போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த <>லிங்க் மூலம்<<>> ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள். இதை உங்க நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 11, 2025

காஞ்சிபுரம்: சொந்த ஊரில் அரசு வேலை!

image

காஞ்சிபுரம், ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <>மேலும் தகவலுக்கு.<<>>
ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

பரந்தூர் விமான நிலையப் பணிகள் தீவிரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கான நில கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களில் 441 நில உரிமையாளர்கள், 566 ஏக்கர் நிலங்களை ஒப்படைத்து, 284 கோடி இழப்பீடு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.29,150 கோடி மதிப்பில் அமையும் இந்த திட்டம், 20 கிராமங்களில் நடைபெறுகிறது. விமான நிலையம் அமைய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!