News January 13, 2026

காஞ்சிபுரம்: மிஸ் பண்ணிடாதீங்க – ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் 1 பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளம் ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஜன.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்!

Similar News

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

மாங்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16ஆவது மாடியில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மேல் தளத்தில் வசித்து வரும் கோபிநாத், சைதன்யா, நிர்மல், பிரியங்கா ஆகியோர் இரவு நேரங்களில் சத்தம் போடுவதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் நாளை பவர் கட்!

image

பழையசீவரம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.7) காலை 9 மணி முதல் பிற்பகம் 3 மணி வரை மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலூர், மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ் ஒட்டிவாக்கம், ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, அருங்கம்பாக்கம், அவளூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

சுங்குவார்சத்திரம் அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர், தனது மனைவி நிவேதாவுடன்(27) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொளச்சூர் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய ஜெகதீஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!