News February 14, 2025
காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார். அதன்படி மாவட்ட தலைவராக கே.ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளராக ஜ.பாஸ்கர், மாவட்ட பொருளாளராக அ.விஜய் பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மோ.கோபி ஆகியோரை நியமனம் செய்து பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து சிறப்பாக செயலாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2025
காஞ்சிபுரத்தில் ஒரே ஆண்டில் 69 சிறார்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2 மகளிர் காவல் நிலையம் உட்பட 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக, ஓராண்டில் 69 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுவது, பெற்றோர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
News February 18, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <