News August 12, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 12, 2025

மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

image

காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.12) காஞ்சிபுரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் வட்டாரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

இன்று (ஆகஸ்ட் 11) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

News August 12, 2025

காஞ்சிபுரம்: தேர்விற்கான இலவச பயிற்சி அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட
49 காலிப்பணியிடங்களுக்குமான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கம் என அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!