News January 4, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஜன.03) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
காஞ்சிபுரம்: மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சுகந்தி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். அதனால் மகன்களை கண்டித்து வளர்க்க வில்லை என மனைவி சுகந்தியிடம் நேற்று முன் தினம் பழனி தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை கத்தியால் வெட்டினார்.
News January 30, 2026
குன்றத்தூரில் சர்க்கரை நோயால் விபரீத முடிவு!

குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட மேம்பாலம் மீது ஒருவர் கையில் கயிறுடன் 30 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் குன்றத்தூரைச் சேர்ந்த கன்னியப்பன்(47) என்பதும், சர்க்கரை நோய் தாக்கம் அதிகமாக இருந்ததால் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.
News January 30, 2026
குன்றத்தூரில் சராமாரியாக வெட்டி வெறித் தாக்குதல்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்த்(42). இவரது நண்பர் சங்கர்(47). இருவரும் கொல்லச்சேரியில் உள்ள ஓட்டலில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த வசந்த், கத்தியால் சங்கரை சராமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, வசந்தை கைது செய்தனர்.


