News January 23, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு விருது

தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. தேசிய வாக்காளர் தின விழாவில், ஆளுநர் விருதை வழங்க இருப்பதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
காஞ்சி: வரதராஜ பெருமாள் கோயிலில் முறைகேடு?

காஞ்சிபுரம், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற தங்க பல்லி சிலை உள்ளது. இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் புணரமைப்பு பணிக்காக மாற்றம் செய்த போது, தங்கம் பல்லியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஶ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 6, 2025
காஞ்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

சென்னை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
காஞ்சி: மத்திய அரசு வேலை, ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <


