News November 2, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 01.11.2025 காலை 6 மணி முதல் 02.11.2025 காலை 6 மணி வரை எந்தத் தாலூகிலும் மழை பதிவாகவில்லை என TNSDMA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் மழை அளவுக் கண்காணிப்பு நிலையங்களில் 0 மிமீ என பதிவாகியுள்ளது. மனிதன், மாடு, வீடு உள்ளிட்ட சேதங்கள் எதுவும் இல்லை என அறிக்கை கூறுகிறது.
Similar News
News November 3, 2025
காஞ்சிபுரம்: இன்று எங்கெல்லாம் மின்தடை?

உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டிதாங்கல், மாகரல், ஆற்பாக்கம், இளையனார்வேலுார், காவாந்தண்டலம், காவாம்பயிர், காஞ்சிபுரத்தில் சேக்குபேட்டை கவரை தெரு, மாமல்லன் நகர், மின் நகர், பி.எஸ்.கே., தெரு, காந்தி ரோடு & அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
காஞ்சிபுரம்: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின், மக்கள் நல்வரவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ.03) காலை 9 மணி முதல் தொடங்க உள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News November 3, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவம்பர். 02) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


