News October 21, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
காஞ்சியில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (பிப். 1) அன்று வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
காஞ்சி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News January 31, 2026
காஞ்சி: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <


