News August 6, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள்.
Similar News
News January 25, 2026
காஞ்சி: மின் வாரியத்தின் ‘நூதன’ கண்டு பிடிப்பால் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்தூர் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு, மின் வாரியம் நூதன முறையில் பதிலளித்துள்ளது. கம்பி துருப்பிடித்த இடத்தில் ரப்பர் காலணியை நுழைத்து தற்காலிகமாகச் சரிசெய்துள்ளனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் இத்தகைய ஆபத்தான மற்றும் அலட்சியமான செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர்.
News January 25, 2026
காஞ்சிபுரம்: பணிக்குச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், போளிவாக்கத்தைச் சேர்ந்த பிரிந்தா (29) என்ற தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர், நேற்று காலை பணிக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். ஸ்ரீபெரம்பத்தூர் – சிங்கப்பெருமாள் கோவில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.24) இரவு – இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


