News July 4, 2025
காஞ்சிபுரம் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<
Similar News
News December 11, 2025
காஞ்சிபுரம்: 10ம் வகுப்பு மாணவனுக்கு தலையில் வெட்டு!

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் தேவா. கரசங்கால் துண்டல் கழனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பள்ளி உணவு இடைவேளை நேரத்தில் தேவாவின் தலையில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கத்தியால் வெட்டினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 9-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடக்கிறது.
News December 11, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் டிச.19 ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்வதால் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
News December 11, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


