News September 24, 2025
காஞ்சிபுரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

காஞ்சிபுரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
Similar News
News September 24, 2025
காஞ்சிபுரம்: குட்கா விற்பனை – இருவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் அடுத்த மாத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரான அசாம் மாநிலத்தைச் அச்சத் உத் ஜமான் (35), அஜிபுர் இஸ்லாம் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
News September 24, 2025
காஞ்சிபுரம் தேர்வர்கள் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செப்.28 நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும். 9-க்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதியில்லை. செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்காக சிறப்புப் பேருந்துகள் காலை 6 மணி முதல் இயக்கப்படும்
News September 24, 2025
காஞ்சிபுரத்தில் அரசு வேலை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் ஒப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 09.10.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.