News March 23, 2024
காஞ்சிபுரம்: பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ

காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரர்மழலையர் தொடக்கப்பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழா காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி பரிமளா அறிவழகன் செய்திருந்தார்.
Similar News
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

படப்பை அடுத்த காவனூர் ஊராட்சி, திருத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(25). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் நண்பர் பிபின்(33), பஞ்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் கூத்தனூரில் உள்ள பஞ்சர் கடையில் இருந்தனர். அப்போது, பைக்கில் வந்தவர்கள் இருவரிடமும் தகராறு செய்தனர். சராமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், பிபின், அபினாஷ் படுகாயமடைந்தனர்.
News February 4, 2026
உத்திரமேரூரில் 2 வாலிபர்கள் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலன்(17), கதிரவன்(23). செந்தூரப்பாண்டி(15). நேற்று முன் தினம், மூவரும் திருவிழா காண சென்று விட்டு பைக்கில் வயலூர் திரும்பினர். அப்போது பெருநகர் மானாமதி சாலையில் தடுப்புக் கம்பியில் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது பாலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று(பிப்.3) கதிரவனும் உயிரிழந்தார்.
News February 4, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்


