News September 9, 2025
காஞ்சிபுரம்: பணக் கஷ்டம் நீங்க…

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூர் பகுதியில் கள்வப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் கள்வப்பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தயிர்சாத நெய்வேத்தியம் படைத்து விஷேச பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என நம்பப்படுகிறது. பணக் கஷ்டத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவுங்க!
Similar News
News September 9, 2025
BREAKING: காஞ்சிபுரம் டி.எஸ்.பி-யை விடுதலை செய்ய உத்தரவு!

காஞ்சி டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவரை சிறையில் அடைக்க காஞ்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.,9) உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.
News September 9, 2025
BREAKING: காஞ்சிபுரம் வரும் விஜய்

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலை நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் தவெகவின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த கையோடு, மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். செப்.13 திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கும் விஜய் அக்.18ல் காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயை காண தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
News September 9, 2025
காஞ்சிபுரம்: இ-ஸ்கூட்டர் வாங்க செம வாய்ப்பு

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!