News January 19, 2026

காஞ்சிபுரம்: தோழி கண் முன்னே துடிதுடித்து பலி!

image

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(21), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், படூரைச் சேர்ந்த திவ்யா(25) என்பவருடன் நேற்று முன் தினம் போரூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு, குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், தரப்பாக்கம் அருகே பைக் தடுமாறியதில் விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த பிரவீன் குமார் தனது தோழி கண் முன்னரே உயிரிழந்தார்.

Similar News

News January 23, 2026

காஞ்சியில் 4 பேர் அதிரடி கைது!

image

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துரையை கடந்த 14-ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தித் தாக்கியது. பின்னர், அவரிடமிருந்து ‘ஜி-பே’ மூலம் 8,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு பாதியில் இறக்கிவிட்டுத் தப்பினர். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சய், பிரதீப் குமார், முகமது ரியாசுதீன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.

News January 23, 2026

காஞ்சி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

காஞ்சி: மாற்றுத்திறனாளி வயிற்றில் அடித்த ஹோட்டல்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த ரமேஷ் (38) என்ற மாற்றுத்திறனாளி சம்பள பாக்கியை வழங்காததால் மதுபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!