News December 25, 2025
காஞ்சிபுரம்: தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு!

திருப்போரூர்: வேம்படி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(50). இவர், ஆலத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த போது மூச்சிட் திணறல் ஏற்பட்டு மயங்கு விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 26, 2025
காஞ்சிபுரம்: புரோக்கர் கத்தியால் குத்திக் கொலை!

வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஷ்(41). ரியல் எஸ்டேட் தரகரான இவர், சுரேஷ்(40) என்பவரிடம் ரூ.34,000 கடன் வாங்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், அடகு வைத்த நகையை விற்று பணம் தருவதாக சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை காத்திருக்க வைத்தார் லிங்கேஷ். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷின் நண்பர் சரத்குமார், லிங்கேஷை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
News December 26, 2025
காஞ்சிபுரத்தில் இடியாப்பம் விற்பவர்களுக்கு உரிமம் கட்டாயம்.

காஞ்சிபுரத்தில் சைக்கிள், பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி தமிழக உணவு பாதுகாப்புத்துறை உரிமம்/பதிவு (FSSAI) பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு சுகாதாரத்தை உறுதி செய்து, மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துறை தெரிவித்துள்ளது. உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
காஞ்சி: பொருளாதார சிக்கலா! இங்க போங்க

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. பொருளாதார சிக்கலில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்


