News March 26, 2024

காஞ்சிபுரம்: தொடங்கியது 10ம் வகுப்பு தேர்வு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 66 தேர்வு மையங்களில் 15,953 மாணவ மாணவிகள் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 100க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட தயாராக இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 19, 2025

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நாளை மின்தடை

image

ஸ்ரீபெரும்புதுாரில் நாளை (ஏப்ரல் 20) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், NGO காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் (9AM – 5PM) மின்தடை ஏற்படும்.

News April 18, 2025

காஞ்சிபுரம்: பொன் சேர வேண்டுமா…? இங்கு போங்க

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் கோயிலின் சிறப்பு இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ” ஓம் ” என்ற ஒலி கேட்பதாக சொல்வதுண்டு.இந்தத் தலத்தில் பக்தி பாடல்களை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொன் சேர்க்க நினைப்பவர்களுக்கு பகிரவும்

News April 18, 2025

காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க் <<>>மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். SHARE

error: Content is protected !!